ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷுப்மன் கில்!
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய அணியின் அலானா கிங்கும் வென்றுள்ளனர்.

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இதில் ஆடவருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித், ஷுப்மன் கில் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Trending
இதில் ஸ்டீவ் ஸ்மித் இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதன் பின், நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அரையிறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் பெயரும் இந்த பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் பிப்ரவரி மாத்தில் மட்டும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 101 என்ற சராசரியை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸும் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் வென்றுள்ளார்.
Shubman Gill in February :
— CRICKETNMORE (@cricketnmore) March 12, 2025
406 runs
102 Average
5 Innings pic.twitter.com/JYB2cdKAuS
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகள் பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அலானா கிங், ஆல் ரவுண்டர் அனபெல் சதர்லேண்ட் மற்றும் தாய்லாந்து அணியைச் சேர்ந்த திபட்சா புத்தாவோங் ஆகியோர் இந்த விருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இதில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய அணியின் அலனா கிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now