
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஸ்டீவ் ஸ்மித் இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதன் பின், நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அரையிறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.