
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் நாளைய போட்டிகான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.