கிளென் மேக்ஸ்வெல்லிற்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய வீரர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்தார்.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
Trending
இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் இந்திய வீரர் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பரிசளித்தார். இருவரும் ஐபிஎல்-ல் பெங்களூரு அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now