
Glenn Maxwell is out of cricket for up to three months! (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு போதாத காலம் போல. அவர்கள் நாட்டிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றோடு அந்த அணி வெளியேறி பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இப்போது அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்காக தயாராகி வருகிறது.
இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் ஒரு பார்ட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் அங்கு விளையாட்டாக ஓடி வரும்போது வழுக்கி விழுந்துள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இப்போது அதற்கான சிகிச்சையில் இருக்கும் மேக்ஸ்வெல்லுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அவரால் விளையாட முடியாது.