
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஃபினிஷர் ஷஷாங்க் சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்களைக் குவித்தார்.
இதில் சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 97 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையிலும் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதேசமயம் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.