
நடப்பு உலக கோப்பையில் பலமிக்க அணிகளாக பார்க்கப்பட்ட அணிகளில் ஆஸ்திரேலியா அணியும் ஒன்று. பந்துவீச்சு அடிப்படையில் எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து விட உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பைக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக முக்கிய வீரர்கள் காயமடைந்து பெரிய பின்னடைவை கொடுத்தார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதிரடியாக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் கடைசி நேரத்தில் காயமடைந்தார். மேலும் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இடது கை சுழற் பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகர் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமான பந்துவீச்சாளராக கருதப்பட்டார். அவர் கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த இரண்டு வீரர்களும் கிடைக்காமல் போனது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது ஸ்பின்னர் ஆக அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியில் குறிப்பிடப்படுகிறார். அவரை பகுதி நேர பந்துவீச்சாளராக பார்க்க கூடாது என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளரும் கேட்டுக் கொண்டிருந்தார்.