
Glenn Maxwell ties the knot with Vini Raman (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னராக வலம்வருகிறார்.
மேலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதையடுத்து, அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி.
சமகாலத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல், தமிழத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.