
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 11 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த மோசமான ஆட்டம் காரணமாக அண்மையில் ஐசிசி வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 9ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடத்திற்கு விராட் கோலி சரிவை சந்தித்துள்ளார்.
இன்று இந்திய கிரிக்கெட் உலகம் முழுவதும் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ள விஷயம் விராட் கோலியின் டி20 எதிர்காலம். இதனால் அடுத்து வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி புறக்கணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் பேசியுள்ளார்.