
‘Good Experience’: Rishabh Pant Watches Euro 2020 (Image Source: Google)
நடப்பாண்டு யூரோ கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இப்போட்டி லண்டனில் வெம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியை காண பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இப்போட்டியை மைதானத்திலிருந்து இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் நேரில் பார்த்து ரசித்துள்ளார்.