
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 121 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சதம் விளாசிய விராட் கோலி பிறந்த நாளில் சதம் அடித்ததோடு மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையையும் இன்று சமம் செய்தார். கடந்த போட்டியிலேயே சதத்தை நெருங்கி அதனை தவற விட்ட விராட் கோலி இம்முறை சதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பிறந்த நாளில் அடித்த இந்த 49ஆவது சதம் குறித்து பேசிய விராட் கோலி, “இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாக இருந்தது. ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்ததால் அந்த மொமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். அதோடு தொடக்க ஓவர்கள் கடந்து மிடில் ஓவர்களின் போது பந்து சற்று நின்று திரும்பி வந்தது.