Advertisement

நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி!

நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி எங்களுக்கு வலியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். 

Advertisement
நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி!
நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 21, 2023 • 10:28 PM

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்த்திது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 399/7 ரன்கள் குவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 21, 2023 • 10:28 PM

அந்த அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 85, வேன் டெர் டுஷன் 60, கேப்டன் ஐடன் மார்க்ரம் 42, ஹென்றிச் கிளாசென் 109, மார்கோ ஜான்சென் 75 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் எடுத்தனர். அந்தளவுக்கு சுமாராக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Trending

இதை தொடர்ந்து 400 என்ற பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹரி ப்ரூக், கேப்டன் பட்லர் என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் மார்க் வுட் 43, அட்கின்ஷன் 35 ரன்கள் எடுத்தும் 22 ஓவரிலேயே 170 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய தென் ஆப்பிரிக்கா 229 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனால் இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3ஆவது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்தின் செமி ஃபைனல் வாய்ப்பு கேள்விக்குறியான நிலையில் 4ஆவது வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களை சாய்த்தார். இந்நிலையில் கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் சந்தித்த படுதோல்வியிலிருந்து தங்களுடைய அணி கம்பேக் கொடுத்துள்ளதாக தற்காலிக தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்கம் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இங்கிலாந்து சேசிங் செய்வதை விரும்புவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ததை கச்சிதமாக எடுத்துக் கொண்டோம். அதிர்ஷ்டவசமாக எங்களுடைய பவுலர்கள் வெயிலில் பந்து வீசவில்லை. நீண்ட காலமாக அணியில் இருந்த ஹென்றிக்ஸ் என்று சிறப்பாக விளையாடினார்.

ஒவ்வொரு நாளும் பயிற்சிகளை எடுத்து அவருக்கு இன்று பரிசு கிடைத்துள்ளது. எங்களிடம் 5, 6 ஆகிய இடங்களில் கிளாசின் மற்றும் மில்லர் ஆகிய அதிரடியான வீரர்கள் இருக்கின்றனர். மார்கோ யான்சென் இது போன்ற உலக அரங்கில் க்ளாஸெனுடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து தன்னுடைய திறமையை காட்டி பெருமையடைந்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி எங்களுக்கு வலியை கொடுத்தது. தற்போது அதிலிருந்து நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement