
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடர ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்தார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கேமரூன் கிரீன் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
மேற்கொண்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் கேமரூன் க்ரீன், இந்தாண்டு இறுதியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதும் சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேமரூன் கிரீன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.