
ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் இரண்டு முறை அரைசதம் விளாசி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாவும் முதலிடம் பிடித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையும் சூரியகுமார் படைத்திருக்கிறார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அடி எடுத்து வைத்து 20 மாதங்கள் ஆன நிலையில் சூரியகுமார் முதலிடம் பிடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தனது ரகசியம் குறித்து சூரியகுமார் ஐசிசி தளத்திற்கு பேசியிருக்கிறார்.
அதில் பேசிய அவர், “இந்திய அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த சுதந்திரமே என்னால் சிறப்பாக விளையாட காரணமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் ஆட்டத்தின் நெருக்கடியான கட்டத்தில் தான் நான் பேட்டிங்கில் களமிறங்கி வருகிறேன். ஆனால் இந்திய அணி நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள். அதிரடியாக ஆட எனக்கு பச்சை சிக்னல் வழங்கினார்கள். நான் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்கினாலும் அணி கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்வேன்.