
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
அந்தவகையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அதேசமயம் தோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகையும், மூன்றாம் இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 7 கோடியும், எலிமினேட்டர் சுற்றில் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
மேற்கொண்டு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கு ரூ.15 லட்சமும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரருக்கு ரூ. 12 லட்சமும், தொடரின் சிறந்த இளம் வீரருக்கு ரூ. 20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
Jay Shah announces Rs 25 lakh prize money for groundsmen and curators of all IPL 2024 venues! pic.twitter.com/s2dtgMPcS8
— CRICKETNMORE (@cricketnmore) May 27, 2024