மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று நடைபெறற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்நே ராணா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்நே ரானா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. களமிறங்கிய அந்த அணிக்கு சபினேனி மேகனா மறும் ஷோபியா டங்க்லீ இருவரும் தொடக்க வீராங்கனையாக களமிறங்கினர். இதில், மேகனா (8) ஆரம்பத்திலே வெளியேற அடுத்து வந்த ஹர்லீன் தியோல் நிலைத்து நின்று ரன்கள் குவித்தார். சோபியா டங்கலி மற்றும் ஹர்லீன் தியோல் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களை ஓட விட்டனர். ஒவ்வொருவரது ஓவரையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினர்.
ஒரு கட்டத்தில் டங்க்லி 28 பந்துகளில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆஷ்லே கார்ட்னெர் 19 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். தயாளன் ஹேமலதா 16 ரன்களில் வெளியேறினார். இதே போன்று அன்னாபெல் சதர்லேண்ட் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்னே ராணா 1 ரன் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார்.