ஐபிஎல் 2025: பயிற்சியாளர்களை மற்ற முடிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்; புதிய பயிற்சியாளர் யார்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்கள் பயிற்சியாளர் குழுவை முழுமையாக மாற்ற முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அங்கம் வகித்த அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.
Trending
மேற்கொண்டு இந்த ஏலத்திற்கு முன்னதாக எந்தெந்த வீரர்கள் தங்களது அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இந்த முறை தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்க கோரி ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் விரும்பம் தெரிவித்துள்ளன. ஆனால் ஐபிஎல் அணிகளின் ரிடென்ஷன் விதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் அடுத்த மாதம் இறுதிக்குள் பிசிசிஐ யின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு மொத்தமாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, ஆலோசகர் கேரி கிரிஸ்டன், கிரிக்கெட் இயக்குநர் விக்ரம் சோலங்கி உள்ளிட்டோரை அந்த அணி மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்களாக நெஹ்ரா, கேரி கிரிஸ்டன் மற்றும் இயக்குநராக விகரம் சோலங்கி நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பயிற்சியின் கீழ் அந்த அணி முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதுடன், இரண்டாவது தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதன் காரணமாகவே வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணியின் பயிற்சியாளர்களை மாற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்ல. ஒருவேளை குஜராத் டைட்டன்ஸ் அணி புதிய பயிற்சியாளர் நியமிக்க முயற்சித்தால் அதில் ரிக்கி பாண்டிங் முதல் தேர்வாக இருப்பார் என்ற கருத்துகளும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now