Advertisement

ஐபிஎல் 2023: பேட்டிங் சொதப்பிய ராஜஸ்தான்; குஜராத்திற்கு எளிய இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 118 ரன்களில் ஆல் அவுட்டானது.

Advertisement
Gujarat Titans have bundled out Rajasthan Royals for 118 in 17.5 overs!
Gujarat Titans have bundled out Rajasthan Royals for 118 in 17.5 overs! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 05, 2023 • 09:18 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்றுவரும் 48ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 05, 2023 • 09:18 PM

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை களமிறங்கினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற ஜோஸ் பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்களைச் சேர்த்திருந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். 

Trending

இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க,  அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்க, ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோர் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மது ஆகியோரது சுழலில் சிக்கி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா ஓரளவு தாக்குப்பிடித்தாலும், 17.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பறினார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement