
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்து. இதில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை அதிகபட்சமாக ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லை ரூ.16.50 கோடிக்கும், சாய் சுதர்ஷனை ரூ.8.50 கோடிக்கும், ராகுல் திவேத்தியா மற்றும் ஷாருக் கான் ஆகியோரைத் தலா ரூ.4 கோடிக்கும் என குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துள்ளது.
அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரை குஜராத் டைட்டன்ஸ் அணி விடுவிடுதுள்ளது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இருப்பினும் அந்த அணி எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகளையும் அதிகரிக்கச்செய்துள்ளது. அந்தவகையில் அந்த அணி தங்களது பயிற்சியளார் குழுவில் முன்னாள் இந்திய விரரான பார்த்தீவ் படேலை இணைத்துள்ளது.