
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீனையும் வாங்கியது. இதில் அதிகபட்ச தொகையான ரூ. 18.50 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தவிர்த்து அஜிங்கிய ரஹானே என்ற பெரிய வீரரை மட்டும்தான் வாங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மீட்டிங்கில், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் வழக்கம்போல உள்ளூர் மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அணிக்கு எதிராக ஒரு போட்டியை சேப்பாக்கத்திலும், மற்றொரு போட்டியை எதிரணியின் சொந்த மைதானத்திலும் விளையாடும். அதாவது 2019ஆம் ஆண்டில் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.