
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கௌகாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய இரண்டாவது தோல்வியைத் தழுவியுள்ளது. அதிலும் குறிப்பாக நேற்றைய தின தங்களுடைய சொந்த மைதானத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விருப்பம் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், போட்டி தொடங்கி மூன்று வாரங்களுக்குப் பிறகு தான் ராஜஸ்தான் அணி தங்கள் சொந்த மாநிலத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று கற்பனை செய்வது கடினம். ராஜஸ்தானுக்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆடுகளங்கள் தேவை, ஆனால் கவுகாத்தி விக்கெட் அவர்களின் உத்திக்கு பொருந்தவில்லை.