
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இதனையடுத்து இன்றைய தினம் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பங்கேற்க ரசிகர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் திரண்டிருந்தனர். மேலும் ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பல்வேறு வாயில்களிலும் நுழைய முயற்சித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டத்து.
இதில் சிலர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழையவும் முயற்சி செய்தனர். இதனையடுத்து காவலர்கள் தடியடி நடதிதி ரசிகர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்றபட்ட கூட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கு அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.