Chinnaswamy stadium
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்ததார். இந்த நிலையில், அர்சிபி அணி நிர்வாகமும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Related Cricket News on Chinnaswamy stadium
-
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆர்சிபி நிர்வாகம்!
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
-
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரபலங்கள்!
ஆர்சிபி வெற்றி பேரணியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். ...
-
ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட வெற்றி பேரணியின் போது கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
விக்கெட் கணிக்க முடியாததாக உள்ளது - பெங்களூரு மைதானம் குறித்து ரஜத் பட்டிதார்!
எங்கள் சொந்த மைதானப் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். ...
-
பெங்களூரு பிட்சுக்கு பிளோ ஆவரேஜ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசுவாமி ஆடுகளம் “சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்கள்; காவல்துறையினர் வழக்குப்பதிவு!
விராட் கோலியைச் சந்திக்க மைதானத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த ரசிகர்கள் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47