
Harbhajan faced many challenges but always came out fighting, says Rahul Dravid (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு விடைத்தரும் வகையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அக்காணொளியில் பேசிய டிராவிட், “ஹர்பஜன் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து போராடி முன்னேறி வந்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது சற்றும் தளராமல் தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பினார்.
A legend and one of the finest to have ever played the game! #TeamIndia congratulate @harbhajan_singh on a glorious career@imVkohli | @cheteshwar1 pic.twitter.com/iefNrA4r2M
— BCCI (@BCCI) December 24, 2021