Advertisement

உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

நஜாம் சேத்திக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா பயப்படுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் டீம் இந்தியா அந்தப் போட்டியில் என்ன சாதனையை செய்துள்ளது என்று அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2023 • 19:38 PM
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை! (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே நிலைமைகள் அவ்வளவு சுமுகமாக செல்லவில்லை. தற்போது ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் இலங்கை என இரு நாடுகளில் நடந்தாலும், இரண்டாவது நாடாக இலங்கைக்கு பாகிஸ்தான் மழையின் காரணமாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இலங்கையில் போட்டி நடக்கும் பட்சத்தில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால், கொழும்புவில் போட்டி வேண்டாம் என்றும், ஹம்பன்தோட்டாவில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த ஒருமணி நேரத்தில் அந்த முடிவு மாற்றப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி குற்றம் சாட்டியதோடு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி தோற்க இந்தியா பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.

Trending


இந்த நிலையில் அப்போதே அவரது பேச்சுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. தற்போதைய நிலையில் ஹர்பஜன் சிங் நஜாம் சேத்திக்கு மீண்டும் தன்னுடைய பதிலடியை தந்திருக்கிறார். அதில் நடைபெற்ற முடிந்த போட்டியின் முடிவு குறித்து தனது கருத்தைக் காட்டமாகவே பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “நஜாம் சேத்திக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா பயப்படுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் டீம் இந்தியா அந்தப் போட்டியில் என்ன சாதனையை செய்துள்ளது என்று அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். மேலும் அவர் தனக்கான பதிலை பெற்று இருப்பார் என்று நம்புகிறேன். அதனால் உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

பாகிஸ்தான் பார்வையில் அவர்கள் அந்தப் போட்டியில் சோர்வடைந்ததைத் தவிர வேறு எதையும் பெறவில்லை. பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்தது. பேட்டிங்கும் அப்படியே இருந்தது. தரமான பந்துவீச்சுக்கு எதிராக விளையாடும் திறனை எந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனும் காட்டவே கிடையாது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement