
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே ஆட்டத்தை நிர்ணயிக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி தரப்பிலும் எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்திருக்கிறார்கள்.
அண்மை காலமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமை, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். அதற்கேற்ப அவரும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் ரன்களை குவித்து வருகிறார். அனைத்து நாடுகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் பாபர் அசாம், ஐசிசி தரவரிசை பட்டியலிலும் முன்னிலையில் உள்ளார்.
இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், பந்துவீச்சாளர்களுக்கு ஈடாக பேட்ஸ்மேன்களை உருவாக்கியுள்ளோம் என்று விராட் கோலியுடன் ஒப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் அக்தருடன் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நடத்திய உரையாடலின் போது கருத்து தெரிவித்துள்ளார்.