
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு, இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வந்த டேவிட் வார்னர் இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் பில் சால்ட் மற்றும் மிச்சல் மார்ஷ் இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 112 ரன்கள் சேர்த்தனர்.
இதில் பில் சால்ட் 59 ரன்களுக்கும் மிச்சல் மார்ஷ் 63 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வரிசையாக டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்க பெரிய சிக்கலில் முடிந்தது. வழக்கம் போல அக்சர் பட்டேல் கடைசியில் வந்து போராடி பார்த்தும் இலக்கை எட்ட முடியவில்லை. 188 ரன்கள் மட்டுமே டெல்லி அணி அடித்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் டேவிட் வார்னரின் பேட்டிங்கை விமர்சித்து, டெல்லி அணி இலக்க இவ்வளவு தூரம் நெருங்க முடிந்ததற்கு காரணமே அவர் விரைவாக ஆட்டம் இழந்தது தான். இல்லையென்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.