
Hardik might be able to bowl by next week, medical team working with him: Rohit (Image Source: Google)
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 2018ஆம் ஆண்டு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பந்து வீசாமல் அணியில் பேட்ஸ்மேனாக நீடித்து வருகிறார்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ள பாண்டியா நிச்சயம் பந்து வீசினால் மட்டுமே அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஆனால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் இதுவரை பந்து வீசாமல் இருந்து வருகிறார்.
அவரது இந்த விவகாரம் தற்போது இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பந்து வீசாமல் அணியில் நீடிப்பது கடினம் என்றும் நிச்சயம் அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதும் இந்திய அணியின் எதிர்பார்ப்பாக உள்ளது.