ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் கரணமாக அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.இதன் காரணமாக எஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளார்.
Trending
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அவர்களைத் தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மூன்று மற்றும் நான்காம் இடத்தை நிரப்புவார்கள்
அவர்களைத் தொடர்ந்து நமன் தீர், இளம் அதிரடி வீரர் ராபின் மின்ஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கும். இதில் ராபின் மின்ஸ் விக்கெட் கீப்பராக விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேற்கொண்டு மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோருக்கும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நமன் தீர், ராபின் மின்ஜ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், அர்ஜுன் டெண்டுல்கர்.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now