
Hardik Pandya becomes first Indian to achieve THIS feat (Image Source: Google)
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று சௌதாம்ப்டனில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிர்கு 198 ரன்களைச் சேர்த்தது.
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அவர்களை விட அனலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் மிரட்டலாக பேட்டிங் செய்து 55 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.