
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இப்போட்டியின் மூலம் பேட்டிங் மற்றும் பந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தனது பெயரில் சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரிசன் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைத்துள்ளது.