
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.
ஒருகட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமயத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடியதுடன் 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
விராட் கோலியின் சாதனை முறியடிப்பு