சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 3 கேட்ச்சுகளை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பெற்றுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதீஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்
Trending
இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் இறுதிவரை போராடிய மஹ்முதுல்லா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் நிதிஷ் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 32 ரன்களையும், ஃபீல்டிங்கில் நஜ்மல் ஹுசைன் சாண்டோ, ரிஷாத் ஹுசைன் மற்றும் தன்சீம் ஹசன் சாகிப் ஆகியோரின் கேட்ச்களை எடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 3 கேட்ச்சுகளை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பெற்றுள்ளார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
சரவ்தேச டி20 போட்டியில் இந்தியாவுக்காக 30 ரன்கள் + 3 கேட்ச்கள் எடுத்த வீரர்கள்
- 2012 - சுரேஷ் ரெய்னா v தென் ஆப்பிரிக்கா
- 2014 - சுரேஷ் ரெய்னா v பாகிஸ்தான்
- 2018 - ரோஹித் சர்மா V வெஸ்ட் இண்டீஸ்
- 2021 - ரோஹித் சர்மா v நமீபியா
- 2024 - ஹர்திக் பாண்டியா v வங்கதேசம்
Win Big, Make Your Cricket Tales Now