
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 9 லீக் சுற்று போட்டிகளில் விளையாட அட்டவணை படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள முதல் ஐந்து போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்திலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று பேசப்பட்டது. ஏனெனில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்ட பாண்டியா அந்த போட்டியின் எஞ்சிய இன்னிங்ஸ்ஸில் இருந்து வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. மேலும் பெங்களூரு சென்ற அவர் அங்கு சிகிச்சையை மேற்கொண்ட வேளையில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்பட்ட வேளையில் நேற்று வெளியான அறிக்கையின் படி இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் விளையாடப்பட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.