
இருதரப்பு தொடர், முத்தரப்பு என அனைத்திலும் எதிரணிகளை இலகுவாக வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா, ஐசிசியால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் ஏனோ தொடர்ந்து சொதப்பியே வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் கூட வெற்றியின் அருகில் வரை சென்ற இந்திய அணி, அதன்பிறகு நடைபெறும் பெரிய தொடர்களில் மிக மோசமான தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
கடந்த வருட டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும், இந்த வருடத்திற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது.
சமகால கிரிக்கெட்டின் வலுவான அணியாக பார்க்கப்படும் இந்திய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்புவி வருவதற்கான சரியான காரணமே தெரியாததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். அதே போல் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் பலர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.