
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.
இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.
முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை.