Advertisement
Advertisement
Advertisement

ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!

காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 27, 2023 • 01:34 PM

ஐபிஎல் 17ஆவது சீசன் கிரிக்கெட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்தது அந்த அணி ரசிகர்களையே கொந்தளிக்க வைத்தது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 27, 2023 • 01:34 PM

அதை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்ற அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க வைத்து இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அவர் கடைசி வரை கேப்டனாக செயல்படுவார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

Trending

ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை தற்போது ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் மும்பையை பின் தொடர்வதை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

முன்னதாக 2023 உலகக் கோப்பையில் பாதியிலேயே காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா அடுத்ததாக நடைபெற்ற தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் வரும் 2024 ஜனவரி 11 – 17 வரை சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் உள்ள டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அதைவிட காயத்திலிருந்து குணமடைய கூடுதலான மாதங்கள் தேவைப்படும் என்பதால் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தகவலின் படி ஆஃப்கானிஸ்தான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாகவும், ஆனால் ஐபிஎல் தொடருக்குள் முழு உடற்தகுதிப்பெற்றுவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதன்படி ஆஃப்கான் தொடரை ஹர்திக் பாண்டியா தவறவிட்டாலும் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்க டி20 தொடரின் போது இந்திய அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் இந்திய அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement