தோனியுடன் ஹர்தீக் பாண்டியா சந்திப்பு; வைரல் புகைப்படம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் எம்எஸ் தோனியின் பக்கங்கள், மிக முக்கியமானவை. இந்திய அணியை வழிநடத்தியதிலும், தன் பங்களிப்பை செலுத்தியதிலும் மகேந்திர சிங் தோனி, அன்றும், இன்றும், என்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். வயதிற்கும் திறமைக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்த தோனி, இன்றும் ஒரு அணியை வழிநடத்தும் கேப்டனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தொடக்கம் முதல் கடைசி வரை எந்த விமர்சனமும் இல்லாமல், ‘கூல் கேப்டனாக’ ஓய்வு பெற்ற எம்எஸ் தேனி, இன்றும் அதே உடல்திறனோடு கிரிக்கெட் விளையாட்டை எதிர்கொள்கிறார்.
தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், அவரின் அன்பான வழிநடத்தலால், ஜூனியர் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அவர் மீது அலாதி அன்பு. குறிப்பாக சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என தோனியின் நிழலாய் இருந்தவர்கள் பலர்.
Trending
அவர் ஓய்வு பெற்றாலும், தோனியை அவர்கள் அவ்வப்போது சந்திப்பதை தவிர்த்தது இல்லை. ஆசானாக, அண்ணனாக, ஆலோசகராக அவர்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் தோனி. அந்த வகையில் சில தினங்களுக்கு முன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார்.
நீண்ட நேரம் அவரது வீட்டில் நடந்த சந்திப்பில், நிறைய ஆலோசனைகளை அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தோனி ஒரு பைக் ப்ரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரிடம் நிறைய பைக் கலெக்ஷன் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான் சோலே படத்தில் அமிதாப் பயன்படுத்தும் இருவர் பயணிக்கும் ‘லிங் டைப்’ ஸ்கூட்டரில், தோனியும் பாண்ட்யாவும் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர்.
‘விரைவில் சோலே-2’ என்ற கேப்ஷனை தட்டிவிட்ட ஹர்திக்பாண்டுயாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தான், தற்போது வைரலாகி வருகிறது. சந்திப்பை நினைவூட்டும் கலகலப்பு பதிவாகவே இது இருக்க வாய்ப்பு. இருந்தாலும், கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் தோன்றுவது புதிதில்லை என்பதால், இதை உண்மையென்றும் பலர் நம்பி வருகின்றனர். சோலே திரைப்படம் அமிதாப்பச்சன் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now