
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
மேலும் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நாட்டிற்காக மேலும் பல கோப்பைகளை வெல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “என்னால், முடிந்தவரை பல சாம்பியன்ஷிப்களை வெல்வதுதான் எப்போதும் முக்கியம். கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, என்னுடைய ஆட்டம் இன்னும் முடியவில்லை, இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன். இப்போது எனது பட்டியலில் மேலும் ஒரு கோப்பை செர்ந்துள்ளது.