Advertisement

பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!

இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவிடம் இருந்து ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக அவரது உடன்பிறவா சகோதரர் வைபவ் பாண்டியாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 11, 2024 • 16:26 PM
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்!
பாண்டியாவை ஏமாற்றிய உடன்பிறவா சகோதரர்; காவல் நிலையத்தில் புகார்! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்று குர்னால் பாண்டியா சகோதரர்கள். இவர்களில் குர்னால் பாண்டியா போதிய வாய்ப்புகளை பெற தவறிவரும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாகும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என பெசப்பட்ட நிலையில், பிசிசிஐ ரோஹித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பை கொடுத்து கேப்டனாக அறிவித்துள்ளது. 

இருப்பினும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உருவெடுத்துள்ளார் என்பதே நிதர்சனம். இந்நிலையில் சகோதரர்களான ஹர்திம், குர்னால் இருவரும் தங்களது உடன்பிறவா சகோதரர் வைபவ் பாண்டியாவுடன் இனைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் வரும் லாபத்தை மூவரும் இணைந்து பிரித்துக்கொண்டுள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக நிறுவனத்தின் வருமானமானது குறைய தொடங்கியதால், பாண்டியா சகோதரர்களை அதற்கான காரணத்தை அறிய முற்பட்டுள்ளனர். 

Trending


அப்போது வைபவ் பாண்டியா அதே நிறுவன வர்த்தகத்தில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது குறித்து பாண்டியா சகோதரர்களிடம் தெரிவிக்கவில்லை. மேலும் தங்கள் நிறுவனத்தின் மூலமாக வரும் லாபத்தையும் அவர் தனது நிறுவனத்தில் வைபவ் முதலீடு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக பாண்டியா சகோதரர்களுக்கு சுமார் ரூ.4.25 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வைபவ் பாண்டியாவை காவல்துறையினர்கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கிரிக்கெட் வீரரிடம் அவரது உடன்பிறவா சகோதரர் ஒருவரே மோசடி செய்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement