
2022ஆம் ஆண்டை வங்கதேசத்துடனான டெஸ்ட் வெற்றியுடன் முடித்துக்கொண்ட இந்திய அணி 2023ஆம் ஆண்டில் இலங்கை அணியுடனான தொடர்களுடன் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த தொடர் வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான டி20 தொடரில் ரோஹித் சர்மா,விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல், தீபக் சஹார் ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்ப்பட்டுள்ளது.
சமீப காலமாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வரும் பந்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கும், ஒருநாள் தொடரில் இஷான் கிஷானும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.