சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பரோடா அணியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவுள்ளது உறுதியாகியுள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பு சீசனானது இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பரோடா அணி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அணியின் கேப்டனாக குர்னால் பாண்டியா செயல்படவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சாதாரண வீரராக இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்த ஆண்டு, குர்னால் பாண்டியா தலைமையில், பரோடா அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது.
Trending
இருப்பினும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வியைத் தழுவி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் பரோடா அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.மறுபக்கம் ஹர்திக் பாண்டியா பற்றி பேசினால் கடந்த 2018-19 ரஞ்சி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை பொறுத்தவரையில் அவர் கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் மீண்டும் இத்தொடரில் விளையடவுள்ளதால், அவரது செயல்பாடு குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்ததுடன், அவரை கேப்டனாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now