
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவத்திலும் ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருந்தாலும், டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு தற்காலிகமாக டி20 இந்தியா அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு எட்டு போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்திருக்கிறார். இதில் 5 போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமல் அமைந்திருக்கிறது.
அடுத்த நான்கு மாதத்தில் இந்தியாவில் 50 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்பது உறுதி. இந்த நிலையில் இதற்கு அடுத்து வரக்கூடிய உலகக்கோப்பைகளில் எப்படியான அணியும் கேப்டனும் இருப்பார்கள்? என்கின்ற கேள்விகள் இருக்கிறது. தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படையாக விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது, “எல்லோரும் விளையாடும் வாய்ப்பை பெறலாம். ஆனால் ஹர்திக் பாண்டியாதான் தலைமை தாங்குவார். 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வர இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே இருப்பார். இதற்கு தேர்வு குழு ஒரு புதிய திசையைப் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.