-mdl.jpg)
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். இருப்பினும் அப்போது 9ஆவது ஓவரின் வீசிய ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களை வீசியதும் துரதிஷ்டவசமாக கால் பகுதியில் காயத்தை சந்தித்தார். அப்போது மருத்துவர்கள் வந்து சோதித்து முதலுதவி கொடுத்த போதிலும் வலி குறையாத காரணத்தால் அவர் பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து அவர் வீசி வேண்டிய எஞ்சிய 3 பந்துகளை நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வீசியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் அரிதாகவே பந்து வீசும் அவர் கடந்த 2017இல் கொழும்புவில் நடைபெற்ற போட்டிக்கு பின் 3 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்காக பந்து பந்து வீசினார்.