Advertisement

ENG vs IND 1st T20I: ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக்; இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan July 08, 2022 • 10:30 AM
Hardik's Fifty & 4-Fer Helps India Cruise To 50 Run Win Against England
Hardik's Fifty & 4-Fer Helps India Cruise To 50 Run Win Against England (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களிலும், இஷான் கிஷன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 33 ரன்களும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் அடித்தனர். 

Trending


அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 17 ரன்னுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

அதன்பின் பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். அவரின் முதல் ஓவரில் ஒரு ரன்களைகூட விட்டுக்கொடுக்காமல் பந்துவீச்சில் மிரட்டிய புவனேஷ்வர் ஐந்தாவது பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை கோல்டன் டக் ஆக்கினார். 

அடுத்து ராய் 4 (16), டேவிட் மலான் 21 (14) போன்றவர்களும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிரடி ஆட்டக்காரர் லிவிங்ஸ்டோனும் ஹார்திக் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய ஹேரி புரூக் 28 ரன்கள், மொயீன் அலி 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். கிறிஸ் ஜோர்டான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியா நான்கு விக்கெட்களும், அறிமுக வீரர் அர்ஷதீப் சிங் மற்றும் சஹால் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement