மகளிர் உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்ப்ரீத் தான் - மிதாலி ராஜ்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி இரண்டு மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டார்.
முன்னதாக துணைக்கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் 4ஆவது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை. எனினும், 5ஆவது போட்டிக்கு திரும்பியபோதும் தீப்தி சர்மாவே துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால், துணை கேப்டன் குறித்த குழப்பம் எழுந்தது.
Trending
இந்த நிலையில் கேப்டன் மிதாலி ராஜ் காணொளி வாயிலாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "கடைசி இரண்டு ஒருநாள் ஆட்டங்களுக்கு தீப்தி சர்மா துணை கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது தேர்வுக் குழுவினர் மற்றும் பிசிசிஐயின் முடிவு. உலகக் கோப்பைக்கு ஹர்மன்பிரீத் கௌர் தான் இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் கேப்டனாக செயல்படுவார்" என தெரிவித்துள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now