
Harmanpreet Named Captain Of The ICC Women's ODI Team Of The Year (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த வீரர்/வீராங்கனைகளை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்கும். அந்தவகையில் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ளது
ஐசிசியின் இந்த ஒருநாள் அணியின் கேப்டனாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேசமயம் சக வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ரேனுகா சிங் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
இவர்களைத் தவிர ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், இங்கிலாந்தின் நடாலி ஸ்கைவர் மற்றும் சோபி எக்லஸ்டோன், நியூசிலாந்தின் அமீலியா கெர் என நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.