-mdl.jpg)
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய மகளிர் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 5-0 என்ற கணக்கில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்றி வெளியிட்டிள்ளது.
இதில் இந்திய மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 இடங்கள் முன்னேற்றி 13ஆம் இடத்திற்கும், ரிச்சா கோஷ் 2 இடங்கள் முன்னேறி 23ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் கலக்கிய இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து 2 இடன்கள் முன்னேறி 8ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் மகளிர் டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனீ மற்றும் தஹ்லியா மெக்ராத் இருவரும் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர். மேலும் மூன்றாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸும், நான்காம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும், 5ஆம் இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர்.