
Harry Brook added to England squad for upcoming T20Is against West Indies (Image Source: Google)
ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதக் டி20 போட்டியானது ஜனவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான 17 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரராக சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.