-mdl.jpg)
தீப்தி ஷர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ரன் அவுட் (மான்கட்) செய்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக போகிறது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் இந்தியா ஒயிட் வாஷ் செய்ததை இங்கிலாந்து நாட்டினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் இன்னமும் தீப்தி சர்மா குறித்தும் இந்திய மகளிர் அணி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, இங்கிலாந்துக்கு தக்க பதிலடி தந்த நிலையில் தற்போது ஹர்ஷா போக்லே ட்விட்டரில் நீண்ட பதிவு ஒன்றை போட்டு இங்கிலாந்தை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்து ஊடகங்கள் தொடர்ந்து மான்கட் விவகாரத்தில் ஒரு இளம் வீராங்கனைய குறித்து கேள்வி எழுப்பி வருவது வேதனை அளிக்கிறது. தீப்தி சர்மா ஐசிசி விதியின் படியே நடந்திருக்கிறார். சார்லி டீன் தொடர்ந்து அந்த தவறை செய்து வந்தது மூலம் அவருக்கு சாதகமாக அமைந்தது. இங்கிலாந்து உடைய கலாச்சாரமே அதுதான். உலக கிரிக்கெட்டை ஆண்டவர்கள் என்ற திமிர் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது.